தலித் மாணவருக்கு சீட் வழங்க ஐ.ஐ.டி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு | Kalvimalar - News

தலித் மாணவருக்கு சீட் வழங்க ஐ.ஐ.டி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுநவம்பர் 24,2021,17:32 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: சரியான நேரத்தில், கல்வி கட்டணத்தை கட்ட முடியாத உத்தர பிரதேச தலித் மாணவருக்கு, &'சீட்&' வழங்கும்படி, மும்பை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உத்தர பிரதேசத்தின் அலகாபாதைச் சேர்ந்த தலித் மாணவர் ஒருவர், மும்பை ஐ.ஐ.டி.,யில் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டார். படிப்பில் சேருவதை உறுதி செய்யும் வகையில் முன்பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள், &'ஆன்லைன்&' வாயிலாக செலுத்த வேண்டும்.போதிய பணம் இல்லாத நிலையில், தன் சகோதரி உள்ளிட்டோரின் உதவியுடன் பணத்தை அந்த மாணவர் சேர்த்துஉள்ளார்.


ஆனால், தொழில்நுட்பக் காரணங்களால் கடைசி தேதிக்குள் அவரால் பணத்தை செலுத்த முடியவில்லை. அதனால், அவருக்கு சீட் மறுக்கப்பட்டது.இது தொடர்பாக அந்த மாணவர் தாக்கல் செய்த வழக்கை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


அதை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:


இந்த வழக்கை மனிதாபமானத்துடன் அனுக வேண்டும். இந்த மாணவருக்கு சீட் மறுக்கப்பட்டால் அது மிகப்பெரிய அநீதியாக அமைந்துவிடும். சீட் எதுவும் காலியாக இல்லை என்று ஐ.ஐ.டி., கூறுவதை ஏற்க முடியாது. இந்த மாணவருக்காக ஒரு சீட்டை உருவாக்க வேண்டும். அவர் படிப்பதற்கு வாய்ப்பு தரப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us