1 முதல் 10ம் வகுப்பு வரை பயிற்று மொழி குறிப்பிட உத்தரவு | Kalvimalar - News

1 முதல் 10ம் வகுப்பு வரை பயிற்று மொழி குறிப்பிட உத்தரவுநவம்பர் 24,2021,17:31 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழில் படித்தவர்களுக்கு, அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, பத்தாம் வகுப்பு சான்றிதழில், ஒன்று முதல் 10 வரை படித்த பயிற்று மொழியை குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு வேலைவாய்ப்பில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு பல ஆண்டுகளாக அமலில் உள்ளது. இதற்காக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு சான்றிதழ்களில், பயிற்று மொழியும் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் மொழிக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில், சில வழிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.


அதன்படி, தமிழில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் ஒன்றாம் வகுப்பு முதல் எந்த வகுப்பிலும் விடுபடாமல், அரசு பணிக்கான கல்வி தகுதி வரை தமிழிலேயே படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதை அமல்படுத்தும் வகையில் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஆனால், பெரும்பாலானவர்களுக்கு 10ம் வகுப்புக்கு முன், எந்த பயிற்று மொழியில் படித்தார் என்பதற்கான சரியான ஆவணங்கள் இல்லாத நிலை உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழில், 10ம் வகுப்புக்கு மட்டுமான பயிற்று மொழியே குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வகுப்புகளில் படித்த மொழி இடம் பெறுவதில்லை.


எதிர்காலத்தில் இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்பிலும் எந்த மொழியில் படித்தார் என்ற விபரத்தையும், 10ம் வகுப்பு சான்றிதழில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த பயிற்று மொழி விபரங்களை, பள்ளி கல்வியின் எமிஸ் மேலாண்மை தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us