அதிகரிக்கும் வருமானம்! | Kalvimalar - News

அதிகரிக்கும் வருமானம்!நவம்பர் 21,2021,10:44 IST

எழுத்தின் அளவு :

&'இந்தியாவில் கூடுதலாக கல்வி கற்கும் ஒவ்வொரு ஆண்டிற்கும் அவரது சராசரி வருமானம் சுமார் 6.7 சதவிகிதம் அதிகரிக்கிறது’ என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் அரசாங்கம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து அறிய, இந்திய மக்கள் தொகை அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட அந்த ஆய்வில், ’ஆண்களை விட பெண்களுக்கு வருமானம் அதிகம். 


ஒவ்வொரு கூடுதல் கல்வி ஆண்டும் பெண்களின் மாத ஊதியத்தில் 8.6 சதவிகிதம் அதிகரிப்பை அளிக்கும் அதே நேரத்தில், ஆண்களுக்கு இந்த எண்ணிக்கை 6.1 சதவிகிதமாக உள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ’அடுத்த ஆறு ஆண்டுகளில் இளம் பருவத்தினருக்கு போதுமான மனநல வசதிகளை ஏற்படுத்துவதற்கான மொத்த செலவு ரூ.8,134 கோடியாக இருக்கும்’ எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us