ரூ.500இல் கொரோனா கிட்! | Kalvimalar - News

ரூ.500இல் கொரோனா கிட்!

எழுத்தின் அளவு :

கொரோனா கிருமியைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை கிட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக் குழுமமான டிரிவிட்ரான், இதற்கான ஆய்வுகளில் இறங்கியுள்ளது. இந்நிறுவனத் தலைவரான டாக்டர் ஜி.எஸ்.வேலுவிடம் பேசினோம்:
''எங்களுடைய சீன பார்ட்னரான 'இன் ஷைன்' கொரோனாவைக் கண்டறிய உதவும் பிசிஆர்டி- - கிட் (PCRT-KIT-) வடிவமைத்தார்கள். இதைச் சீனாவும் அங்கீகரித்தபடியால் இந்த கிட், சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒருவேளை இந்தக் கொள்ளைநோய் இந்தியாவுக்குள் வர ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த நாங்கள், ஜனவரி மாதத்திலேயே ஆராய்ச்சியில் இறங்கினோம். அங்கிருந்து கிட்கள் சிலவற்றை இறக்குமதி செய்து இந்தியாவில் இதன் விற்பனைக்கான அனுமதியை வாங்க முயற்சித்து வருகிறோம்.
இறக்குமதி செய்யப்படும் பிசிஆர் கிட்டின் விலை 1,000 முதல் 2,000 ரூபாய் வரை இருக்கிறது. நம் நாட்டிலே தயாரித்தால், இதனை 500 ரூபாய்க்கு விற்பனை செய்யமுடியும்.
--இந்தக் கிட் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டதா என்று கேட்கிறார்கள். நிறுத்தி நிதானமாகச் சோதிப்பதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. எனவே, கொரோனா வைரஸ் பரிசோதனைகள் சிந்தெடிக் கண்ட்ரோல் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு கொரோனா வைரஸ் சோதனையின் பாசிடிவ் என்கிற முடிவை எடுத்து அதைச் சிந்தஸைஸ், அதாவது பகுப்பாய்வு செய்துவிடமுடியும்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் நாங்கள் வடிவமைத்திருக்கும் பிசிஆர் கிட் தயாராகிவிடும். இதற்கிடையில் தற்போது சீனா தயாரித்திருக்கும் பிசிஆர் கிட்டை விற்பனை செய்ய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். இதன் மூலம் அவர்கள் வேகமாக கொரோனா வைரஸ் பரிசோதனையைச் செய்யமுடியும்.''

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us