கோவிட் 19 என்றால் என்ன? | Kalvimalar - News

கோவிட் 19 என்றால் என்ன?

எழுத்தின் அளவு :

உலக சுகாதார மையத்தின் சர்வதேச நோய் வகைப்பாட்டியல் (ICD - International Classification of Diseases) அமைப்பு, பிப்ரவரி 11, 2020 அன்று, இப்போது உலகெங்கும் பரவியுள்ள புது வைரஸுக்கு, சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 (Severe Acute Respiratory Syndrome Coronavirus 2), சுருக்கமாக சார்ஸ்-கோ வி-2 (SARS-Co V-2) என்று பெயரிட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு, சார்ஸ் தொற்றுநோய்க்குக் காரணமாக இருந்த வைரஸுடன், இந்தப் புதிய வைரஸ் மரபணுரீதியாகத் தொடர்புடையதாக இருந்ததால் அப்பெயர் வைக்கப்பட்டது. ஆனால், இந்த இரு வைரஸ்களும் வேறு வேறானவை.
மேலும், உலக விலங்கு நல மையம் (World Organization for Animal Health), சுருக்கமாக ஓ.ஐ.ஈ. (OIE) மற்றும் உணவு மற்றும் விவசாய மையம் (Food and Agricultural Organization), சுருக்கமாக எஃப்.ஏ.ஓ (FAO) ஆகிய அமைப்புகள் முன்னமே உருவாக்கிய விதிமுறைகளின்படி, புதிதாகப் பரவிவரும் நோய்க்கு - 'கோவிட்-19' (COVID-19) என்று பெயரிட்டுள்ளது. வைரஸுக்கும் நோய்க்கும் பெயரிடுகையில்

ஐ.சி.டி.வி. மற்றும் உலக சுகாதார மையம் ஆகியவை ஒன்றையொன்று கலந்தாலோசித்துக் முடிவு செய்யும்.
- தகவல்: உலக சுகாதார மையம்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us