ஒரு வைரஸ் இன்னொரு வைரஸைத் தாக்குமா? | Kalvimalar - News

ஒரு வைரஸ் இன்னொரு வைரஸைத் தாக்குமா?

எழுத்தின் அளவு :

சளி, காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களில் இருந்து, ஆட்கொல்லி நோய்களான சார்ஸ் (SARS), மெர்ஸ் (MERS), வரை வைரஸ்களால் உண்டாகின்றன. சரி, ஒரு வைரஸ் இன்னொரு வைரஸைத் தாக்குமா?
2008ஆம் ஆண்டு 'மாமா வைரஸ்' (Mamavirus) எனப்படும் பெரிய வைரஸ் ஒன்றுக்குள், சிறிய வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாமா வைரஸ் இன்னொரு வைரஸைத் தாக்கிய பின், சிறிய வைரஸ்களானது, மாமா வைரஸை முடக்கின. தன் மரபுப் பொருளைப் பிரதியெடுக்க வைக்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன.

மாமா வைரஸ்கள் சில வகை அமீபாக்களைத் தாக்கி நோய் உண்டாக்கி அழிப்பவை. இம்மாதிரி வைரஸைத் தாக்கும் வைரஸ்களுக்கு 'வைரோஃபேஜ்' (Virophage) என்று பெயர். இந்தச் சொல்லுக்கு வைரஸ் உண்ணிகள் என்று பொருள்.
மாமா வைரஸின் உள்ளிருக்கும் இந்த வைரஸ், 'ஸ்புட்னிக்' (Sputnik) என அழைக்கப்படும். ஸ்புட்னிக் வைரஸ் உள்ளே இருக்கும்போது, ஒரு செல்லைத் தாக்கிய மாமா வைரஸின் இனப்பெருக்கம் 70% குறைந்தது. அதனால் மாமா வைரஸால் தாக்கப்பட்ட செல் பாதிப்படைவது வெகுவாகக் குறைவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வைரோஃபேஜ்கள் வைரஸ்களைத் தாக்குவது மட்டுமன்றி, வைரஸ்களுக்கு இடையே மரபணுக்களைக் கடத்திச் சென்றிருக்கவும் கூடும் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள். அவற்றைப் பற்றி இன்னமும் சுவாரசியமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது உலகமே பேசி வரும் கொரோனா வைரஸையும் ஆராய்ந்து வருகின்றனர். ஆகவே, வைரஸ்களைத் தாக்கும் வைரஸ்களும் உண்டு என்பது உண்மைதான்.
- சிவா

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us