நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் | Kalvimalar - News

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்அக்டோபர் 29,2021,22:01 IST

எழுத்தின் அளவு :

டிசைன் சார்ந்த படிப்புகளுக்கு நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாகும்!

முக்கியத்துவம்: 

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சக்கத்தின் கீழ் செயல்படும் இக்கல்வி நிறுவனம், விஞ்ஞான மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொழில், தொடர்பியல், ஜவுளி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சர்வதேச தரத்திலான &'டிசைன்’சார்ந்த உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் செயல்படுகிறது.


வளாகங்கள்: 

ஆந்திரா, ஹரியானா, மத்திய பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் வளாகங்களைக் கொண்டுள்ள இக்கல்வி நிறுவனத்தின் தலைமை வளாகம் அகமதாபாத்தில் செயல்படுகிறது. மேலும், இதன் விரிவாக்க வளாகங்கள் காந்திநகர் மற்றும் பெங்களூருவில் உள்ளன.


வழங்கப்படும் படிப்புகள்:

பிரதானமான ஐந்து பிரிவுகளின் கீழ், 20 வகையான படிப்புகளை இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு நிலைகளில் வழங்கப்படுகின்றன. 5 ஆண்டு பிஎச்.டி., படிப்பும் தற்போது அகமதாபாத் வளாகத்தில் துவங்கப்பட்டுள்ளது. சர்வதேச கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களின்படி, 55 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து &'எக்ஸ்சேன்ஜ்’ படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 


இளநிலை பட்டப்படிப்பு: பேச்சுலர் ஆப் டிசைன் - பி.டெஸ்., 


படிப்பு காலம்: 4 ஆண்டுகள்


பிரிவுகள்: 

கம்யூனிகேஷன் டிசைன் - பிலிம் அண்ட் வீடியோ கம்யூனிகேஷன், எக்சிபிஷன் டிசைன், அனிமேஷன் பிலிம் டிசைன், கிராபிக் டிசைன் 

இண்ட்ஸ்டிரியல் டிசைன் - செராமிக் மற்றும் கிளாஸ் டிசைன், பர்னிச்சர் மற்றும் இண்டீரியர் டிசைன், புராடக்ட் டிசைன், 

டெக்ஸ்டைல், அப்பேரல், லைப்ஸ்டைல் அண்ட் ஆக்சசரி டிசைன் - டெக்ஸ்டை டிசைன்.


முதுநிலை பட்டப்படிப்பு: மாஸ்டர் ஆப் டிசைன் - எம்.டெஸ்.,

படிப்பு காலம்: 2 ஆண்டுகள்


பிரிவுகள்:

கம்யூனிகேஷன் டிசைன் - பிலிம் அண்ட் வீடியோ கம்யூனிகேஷன், கிராபிக் டிசைன், அனிமேஷன் பிலிம் டிசைன், போட்டோகிராபி டிசைன்.


இண்ட்ஸ்டிரியல் டிசைன் - செராமிக் மற்றும் கிளாஸ் டிசைன், பர்னிச்சர் மற்றும் இண்டீரியர் டிசைன், புராடக்ட் டிசைன், டாய் மற்றும் கேம் டிசைன், டிரான்ஸ்போர்ட்டேஷன் மற்றும் ஆட்டோமொபைல் டிசைன், யுனிவர்சல் டிசைன்.


இண்டர்டிசிப்பிளினரி டிசைன்- டிசைன் பார் ரீடெயில் எக்ஸ்பீரியன்ஸ், ஸ்டேரடெஜிக் டிசைன் மேனேஜ்மெண்ட்.


ஐ.டி., இண்டெக்ரேட்டர்டு - டிஜிட்டல் கேம் டிசைன், இண்டரேக்சன் டிசைன், இன்பர்மேஷன் டிசைன், நியூமீடியா டிசைன்.


டெக்ஸ்டைல், அப்பேரல், லைப்ஸ்டைல் அண்ட் ஆக்சசரி டிசைன் - அப்பேரல் டிசைன், லைப்ஸ்டைல் அண்ட் ஆக்சசரி டிசைன். டெக்ஸ்டை டிசைன்.


ஆராய்ச்சி படிப்பு: பிஎச்.டி., 


பிரிவுகள்: டிசைன் எஜுகேஷன், டிசைன் இன்னோவேஷன், சோசியல் இன்னோவேஷன், டிசைன் பிராக்டீஸ் போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 


சேர்க்கை முறை: 

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில், 2022-23ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது. மாணவர்களின் துறை சார்ந்த அறிவு, திறன்களை அறிவும் வகையில் இரண்டு கட்டங்களில் டி.ஏ.டி., எனும் &'டிசைன் ஆப்டிடியூட் டெஸ்ட்’ நடத்தப்படும். admissions.nid.edu எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30, 2021.


விபரங்களுக்கு: www.nid.edu


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us