மாண்புமிகு மாணவி! | Kalvimalar - News

மாண்புமிகு மாணவி!அக்டோபர் 25,2021,12:20 IST

எழுத்தின் அளவு :

ஒரு நிமிடத்திற்குள் 40 விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர்களோடு அவற்றின் வாழ்நாளையும் சொல்லி விட்டால் போதும்; &'ஆசிய சாதனை&' புத்தகத்தில் இடம்பிடித்து விடலாம். இவர் சாதித்த எண்ணிக்கை...59.


யார் இவர்

பெயர்: பாக்கியலட்சுமி | பிளஸ் 1

பெற்றோர்: சுப்பிரமணியன் - விஜயபிரபா

பள்ளி: விக்டோரியா பள்ளி, காஞ்சிபுரம்.

அடையாளம்: சாதனையாளர்


&'நாற்பதோட நான் நிறுத்தி இருக்கலாம்தான். ஆனா, எனக்கப்புறம் இந்த முயற்சியை பண்றவங்களுக்கு ஒரு சவால் வேணுமில்லையா!&'


பயம் நல்லது

பயமும் பதற்றமும் இல்லாம எதையும் எதிர்கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கிருந்தாலும், தவறு என் பக்கம் இருக்கிறபட்சத்துல பய உணர்வை எந்த வயசுலேயும் இழந்துடக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்குறேன். இரண்டாவது முறை பிழை நிகழாம இருக்க இந்த பயம் ரொம்பவே அவசியம்.


என் தோழி

காலத்தினாற் செய்யும் உதவி பெரிதுன்னா, நானும் என் தோழி கீர்த்தியும் பகிர்ந்துக்கிற பாடம் தொடர்பான உதவிகள் ஆகச் சிறந்தது. பரஸ்பரம் சந்தேகம் தீருற வரைக்கும் நாங்க சோர்வடையுறதில்லை. ஒருத்தருக்கு புரிய வைக்கும்போது அந்த விஷயம் நமக்குள்ளே ஆழப்பதியும்ங்கிறது என் நம்பிக்கை!


உங்கள் பாக்கியலட்சுமி

&'என்னைத் தோற்கடிக்கிறது நானாத்தான் இருக்கணும்&'ங்கிற குணம் பாக்கியலட்சுமிக்கான வரம்!

- ர.தேன்மொழி, வகுப்பு ஆசிரியை


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us