பி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்ப பதிவு | Kalvimalar - News

பி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்ப பதிவுஅக்டோபர் 27,2021,21:38 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட துணை மருத்துவ பட்ட படிப்புகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் நவம்பர், 8 வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட 19 வகையான, துணை மருத்துவ பட்ட படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு 15 ஆயிரம் இடங்கள் உள்ளன.


இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கபட உள்ளனர்.


மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில், விண்ணப்ப பதிவு துவங்குகியது. நவம்பர், 8 மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை, இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன், &'செயலர், தேர்வுக் குழு, 162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10&' என்ற முகவரியில், நவம்பர்10 மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us