சென்னை: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான துணை கவுன்சிலிங் முடிந்தது. இதில், 6,000 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, &'ஆன்லைன் கவுன்சிலிங்&' நடத்தப்படுகிறது. முதல் சுற்று பொது கவுன்சிலிங் முடிந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக துணை கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
இதில், 6,896 பேர் பங்கேற்றனர்; 5,882 பேர் இடங்களை தேர்வு செய்துள்ளனர். இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் இதுவரை மொத்தம் 95 ஆயிரம் பேர், இடங்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
அவர்களில் 7,876 பேர், அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர். மொத்தம் 1.52 லட்சம் இடங்களில், தற்போது 57 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்களுக்கு, மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு ஐந்து முறை கவுன்சிலிங் நடத்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்துள்ளார்.