புதுச்சேரி: சென்டாக் முதல்கட்ட கலந்தாய்வில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் ஒரே நேரத்தில் குவிந்து விடுவதை தடுக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கலை மற்றும் அறிவியல் படிப்பு களுக்கு விண்ணப்பித்த 4,170 மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் முதற்கட்ட கணினி கலந்தாய்வு வாயிலாக, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இடம் கிடைத்த கல்லுாரியில், மாணவர்கள் நாளை 26ம் தேதி முதல், அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் ஒரிஜினல் சான்றிதழ்களுடன் சென்று, சேர வேண்டும் என சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இடம் கிடைத்த மாணவர்கள், கல்லுாரிகளில் ஒரே நேரத்தில் குவிந்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
அதை தடுப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை சென்டாக் நிர்வாகம் செய்துள்ளது. கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை நடைமுறைகள் குறித்து சென்டாக் அதிகாரிகள் கூறியதாவது:கலை, அறிவியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் மொத்தமுள்ள 4,260 சீட்களில் 4,170 இடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்கள், தங்களின் &'டேஷ்போர்டு&' மூலம், சீட் ஒதுக்கீடு விபரத்தை அறிந்து, சேர்க்கை ஆணையை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
இடம் கிடைத்த மாணவர்கள் ஒரே நேரத்தில் கல்லுாரிகளில் குவிவதை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கலை, அறிவியல் கல்லுாரியும் மாணவர் சேர்க்கைக்கு தனித்தனியாக கால அட்ட வணையை இன்று (25ம் தேதி) முதல் வெளியிடும்.
அந்த அட்டவணைப்படி, மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களுடன் சென்று, இடம் கிடைத்த மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.
சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள், இடம் கிடைத்த கல்லுாரியில் சேர்ந்தாலும், சேராவிட்டா லும் இரண்டாம் கட்ட கலந் தாய்வில் பங்கேற்பதில் சிக்கல் இல்லை. இருப்பினும், இரண்டாம் கலந்தாய்வில் பங்கேற்று சீட் கிடைத்தால், முதற்கட்ட கலந்தாய்வில் அவருக்கு கிடைத்த சீட் தானாகவே ரத்தாகி, வேறு மாணவருக்கு வழங்கப்பட்டு விடும்.
ஒருவேளை இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சீட் கிடைக்கவில்லை என்றால், முதற்கட்ட கலந்தாய்வு மூலம் கிடைத்த படிப்பில் தொடர்ந்து படிக்கலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இறுதி வாய்ப்புகலை, அறிவியல் படிப்பினை தொடர்ந்து, இன்ஜினியரிங், நர்சிங் உள்ளிட்ட தொழில்படிப்புகளுக்கு முதற்கட்ட கணினி கலந்தாய்வு வாயிலாக, சீட் ஒதுக்கப்பட உள்ளது.சில மாணவர்கள் இன்னும் கவுன்சிலிங்கிற்கான பாடப் பிரிவு முன்னுரிமை கொடுக்காமல் உள்ளனர்.
அவர்கள் பாடப்பிரிவு முன்னுரிமையை தேர்வு செய்ய, கடைசி வாய்ப்பு தர திட்டமிட்டுள்ளது. முன்னுரிமை கொடுக்காத மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் இறுதி எச்சரிக்கையும் கொடுக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது.