அண்ணாமலை பல்கலை.,க்கு பதிய துணை வேந்தர் நியமனம் | Kalvimalar - News

அண்ணாமலை பல்கலை.,க்கு பதிய துணை வேந்தர் நியமனம்அக்டோபர் 21,2021,20:04 IST

எழுத்தின் அளவு :

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.,க்கு விரைவில் புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட உள்ளார்.


கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றிய முருகேசன் பதவிக்காலம், ஜூன் 2ம் தேதி முடிவடைந்தது. 


புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரையில், தமிழக உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் தலைமையில், அண்ணாமலை பல்கலை., மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் பாலாஜி சாமிநாதன், பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய பொறுப்பு குழு, பல்கலை நிர்வாகத்தை கவனித்து வருகிறது.


இந்நிலையில், துணை வேந்தரை தேர்வு செய்ய, டில்லி இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வரராவ் தலைமையில் மூவர் அடங்கிய தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டது. 


இக்கமிட்டி, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில் முதற்கட்டமாக 10 பேரை தேர்வு செய்துள்ளனர். அவர்களிடம் நேற்று சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நேர்க்காணல் நடத்தியது.


அதில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., முன்னாள் வேளாண் கல்லுாரி தலைவர் கதிரேசன், காரைக்குடி அழகப்பா பல்கலை., பேராசிரியர்கள் ரவி, மாணிக்கம், ஜெயகாந்தன் மற்றும் மதுரை காமராஜர் பல்கலை., கோவை பாரதியார் பல்கலை., சென்னை பல்கலை., விழுப்புரம் ஜெயலலிதா பல்கலை., சேலம் பல்கலை என, பல்வேறு பல்கலைக் கழக பேராசிரியர்கள் பங்கேற்றனர். 


நேர்க்காணலில் மூன்று பேர் அடங்கிய இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியல் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. விரைவில் அண்ணாமலை பல்கலை.,க்கு புதிய துணைவேந்தர் நியமன அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us