முதுநிலை மாணவருக்கு கவுன்சிலிங் | Kalvimalar - News

முதுநிலை மாணவருக்கு கவுன்சிலிங்அக்டோபர் 21,2021,20:03 IST

எழுத்தின் அளவு :

திருப்பூர்: சிக்கண்ணா அரசு கல்லுாரியில் முதுநிலை பட் டப்படிப்பு மாணவர்களுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது.


முதல் கட்ட கலந்தாய்வு செப்., 14ம் தேதி துவங்கியது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு, கடந்த, 1ல் நடந்தது. முதுநிலைப்பட்ட வகுப்புகளில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், பன்னாட்டு வணிகவியல், விலங்கியல், ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் ஆகிய துறைகளில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன.


இறுதிகட்ட கலந்தாய்வு 22ம் தேதி காலை, 10:00 மணிக்கு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பத்தையும், அனைத்து அசல் சான்றிதழ்களையும், அதன் நகல்களையும் கலந்தாய்வின்போது கொண்டு வருதல் அவசியம். 


முதல் இரண்டு கலந்தாய்வில் பங்கு பெறாதவர்களும், பங்கு பெற்று இடம் கிடைக்காதவர்களும், இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் இதில் பங்கேற்கலாம் என, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us