புதுச்சேரி: சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற புதுச்சேரியை சேர்ந்த மூன்று பேர், கவர்னரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது.
இதில், புதுச்சேரியை சேர்ந்த பிரசன்னகுமார், முகமது ஜாவித், சுப்பிரமணிவேலன் ஆகியோர் முறையே 100, 493 மற்றும் 497 ஆகிய இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றனர். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்த மூவருக்கும் பாராட்டு தெரிவித்த கவர்னர், பயிற்சியை முடித்து சிறப்பாக பணியாற்றுமாறு வாழ்த்தினார்.