பாரதியார் பல்கலைக் கூடத்தில் பரதநாட்டிய பயிற்சிப் பட்டறை | Kalvimalar - News

பாரதியார் பல்கலைக் கூடத்தில் பரதநாட்டிய பயிற்சிப் பட்டறைஅக்டோபர் 21,2021,20:00 IST

எழுத்தின் அளவு :

அரியாங்குப்பம்: பாரதியார் பல்கலைக்கூடத்தில் பரதநாட்டிய பயிற்சி பட்டறையில் வெளி மாநில மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தில், இரண்டு நாட்கள் நடக்கும் பரதநாட்டிய பயிற்சிப் பட்டறை நேற்று துவங்கியது. 


காரைக்கால் கலை பண்பாட்டு குழு சார்பில், பாலகுருநாதன் மாணவ, மாணவிகளுக்கு பரத நாட்டிய பயிற்சிப் பட்டறை நடத்தினார். நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் போஸ், பரதநாட்டிய துறைத் தலைவி ரூர்துசாந்தி, விசித்திரா தினகரன் உட்பட பலர் பங்கேற்றனர். 


இரண்டு நாட்கள் நடக்கும் பயிற்சி பட்டறையில் வெளி மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us