நிவாரணம் இல்லை; ஆசிரியர் குடும்பத்தினர் வருத்தம் | Kalvimalar - News

நிவாரணம் இல்லை; ஆசிரியர் குடும்பத்தினர் வருத்தம்அக்டோபர் 15,2021,14:10 IST

எழுத்தின் அளவு :

பெங்களூரு: கொரோனா இரண்டாவது அலை, தீவிரமாக இருந்த ஏப்ரல் 17ல் லோக்சபா இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்ட 39 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலியாகினர்.


நிவாரணம் கோரி வந்துள்ள மனுக்களை, பரிசீலிப்பது குறித்து, தேர்தல் ஆணையத்திடமிருந்து, இதுவரை எந்த நெறிமுறையும் வரவில்லை. எனவே, மாவட்ட அளவிலான மருத்துவ அதிகாரி அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டியும் மனுக்களை பரிசீலித்து, எட்டு ஆசிரியர்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே, நிவாரணம் பெற தகுதியானவை என, தேர்தல் ஆணையத்துக்கு, சிபாரிசு செய்துள்ளது. இதனால் மற்ற குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளனர்.


தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து துறைகளின் ஊழியர்கள், பணியாற்றும் நேரத்தில் இறந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு தேர்தல் ஆணையம் நிவாரணம் வழங்கும். பணியாற்றும் இடத்தில் இறந்தால் 15 லட்சம் ரூபாய்; பயங்கரவாதிகள், சமூக விரோதிகளினால் தாக்கப்பட்டு, குண்டு வெடிப்பில், ஆய்தங்களால் தாக்கப்பட்டு இறந்தால், 30 லட்சம் ரூபாய்; நிரந்தர ஊனம் ஏற்பட்டால், 7.50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.


கொரோனாவுக்கு பலியான ஆசிரியர் ஒருவரின் மனைவி கூறியதாவது:


என் கணவர், ஏப்ரலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சில நாட்களில் கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் தேர்தல் முடிந்த பின் அவர் இறந்ததால் நிவாரணத்துக்கு சிபாரிசு செய்ய முடியாது என, அதிகாரிகள் கூறுகின்றனர். எங்களை போன்றவர்களுக்கும், நிவாரணத்துக்கு சிபாரிசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us