இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு | Kalvimalar - News

இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்புசெப்டம்பர் 26,2021,12:47 IST

எழுத்தின் அளவு :

பெங்களூரு: இலவச இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இது குறித்து தமிழ் அறக்கட்டளை- பெங்களூரு வெளியிட்ட அறிக்கை:


தமிழ் அறக்கட்டளை -பெங்களூரு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஒரு மாத காலத்திற்கான இணையவழி தமிழ் கற்றல் வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழறிஞர் பொள்ளாச்சி நசனால் வடிவமைக்கப்பட்ட கற்றல் முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


இந்த பயிற்சியில், 30 நாட்களில் அடிப்படை தமிழ் கற்றுத்தரப்படுகிறது. தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் பயிற்சியில் இணைய முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்க்கற்றல் வகுப்புகள், அக்.1 முதல் 30 வரையில் நடக்கவிருக்கிறது. ஜூம் எனப்படும் குவியம் வழியாக தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


தமிழ் வகுப்பில் அறநெறியை கற்பிக்கும் கதைகள், நாப்பிறழ் பயிற்சிக்காக பாடல்களும் கற்றுத்தரப்படுகின்றன. இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற வகையில், 100 பேருக்கு மட்டும் பயிற்சியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது.


இதற்கான விண்ணப்பங்களை https://forms.gle/rTSskW857x53hgQz8 என்ற கூகிள் பார்மில் வரும், 30 மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். 


கூடுதல் விவரங்களுக்கு 94837 55974, 98202 81623 என்ற மொபைல் எண்கள், tamilfoundationblr@gmail.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us