டெண்டர் முறைகேடு செய்து தில்லாலங்கடி! அரசு கல்லூரி முதல்வருக்கு நோட்டீஸ் | Kalvimalar - News

டெண்டர் முறைகேடு செய்து தில்லாலங்கடி! அரசு கல்லூரி முதல்வருக்கு நோட்டீஸ்செப்டம்பர் 26,2021,12:45 IST

எழுத்தின் அளவு :

கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் செயல்படும், மாணவர் கூட்டுறவு பண்டக சாலையில் கொள்முதல் முறைகேடு புகார் சார்ந்த வழக்கில், கல்லுாரி முதல்வர் ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அரசு தொழில்நுட்ப கல்லுாரிகளில் மாணவர்களின் நலனுக்காக மாணவர் கூட்டுறவு பண்டக சாலை கல்லுாரி வளாகங்களுக்குள்ளே செயல்படுகிறது. இதில், மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், பேப்பர் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படும். மாணவர் சேர்க்கையின் போது இதற்காக மாணவர்களிடம் இருந்து, குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும். 


இப்பண்டக சாலைக்காக பொருட்கள் கொள்முதல் செய்யவும், கல்லுாரிக்கு தேவைப்படும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யவும், &'இ- டெண்டர்&' நடைமுறை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.


கல்லுாரி முதல்வர் ரூபாய் 4 லட்சத்திற்கு உட்பட்ட பொருட்கள் கொள்முதலுக்கு, ஒப்புதல் வழங்க அதிகாரம் உண்டு. அதற்கு மேல் இருப்பின், தொழில்நுட்ப கல்லுாரி இயக்குனரகத்திற்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும்.


இந்நிலையில், கல்லுாரி ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களே இணைந்து போலியான பெயரில் நிறுவனம் துவங்கி, இ-டெண்டர் முறையில் பங்கேற்று மோசடி செய்துள்ளனர். 


தவிர, மாணவர் விடுதிக்கு தேவையான மக் (mug), கால்மிதி, டீ கப் செட், பக்கெட் என அனைத்திற்கும் இரண்டு, மூன்று மடங்கு விலை அதிகமாக கொள்முதல் செய்துள்ளதாகவும், ரூ.4 லட்சத்துக்கு மேல் கொள்முதல் செய்ய அதிகாரம் இல்லை என்பதால், 3,99, 997 ரூபாய் என்ற அடிப்படையில், மொத்த விலையை கொள்முதல் பட்டியலில் குறிப்பிடுவதாகவும், கல்லுாரி சக ஆசிரியர்கள், அலுவலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


இம்முறைகேடு தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், மாணவர்கள் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவராக செயல்படும் கல்லுாரி முதல்வரையும், வழக்கில் ஒரு தரப்பாக பதிவு செய்து, தனது தரப்பு பதிலை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


ஆதாரங்களை அழிக்கின்றனர்.


கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், &'இம்முறைகேட்டில் தொடர்புடைய அனைவரும், தொடர்ந்து இக்கல்லுாரியிலேயே பணிபுரிவதால், ஆதாரங்களை அழித்து வருகின்றனர். மாணவர்களிடம் வசூலிக்கும் பணத்திற்கும், கணக்கு சமர்ப்பிப்பதில்லை. உரிய விசாரணை, தணிக்கை ஆய்வு செய்யப்பட வேண்டும். புகாரில் தொடர்புடைய அனைவரையும், வழக்கு முடியும் வரை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்&' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us