இந்தியாவை அறிவு வல்லரசாக மாற்றும் கல்விக் கொள்கை | Kalvimalar - News

இந்தியாவை அறிவு வல்லரசாக மாற்றும் கல்விக் கொள்கை செப்டம்பர் 24,2021,01:45 IST

எழுத்தின் அளவு :

சவால்களுக்கு தீர்வு காணும் திறனை வளர்க்க உதவுவதையும், சிறந்த வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் மாணவர்களை தயார்படுத்துவதையும் புதிய தேசிய கல்விக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் குறிப்பிட்டுள்ளார். 

    

குவகாத்தியில் சமீபத்தில் நடந்த விழாவில் பேசிய அவர், ‘கடந்த 1986ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்குப் பதிலாக, 34 ஆண்டு காலத்திற்கு பின், 2020ல் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை, இந்தியாவை உலகளாவிய அறிவு வல்லரசாக மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 


குழந்தை பருவ கல்வியில், சிறந்த சிந்தனையை தூண்டும் தாய்மொழியின் முக்கிய பங்களிப்பையும், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை மறுசீரமைக்கும் வழிவகைகளையும் கொண்டுள்ளது&' என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us