எஸ்.ஆர்.எம்., தமிழ் பேராயம் விருதுகள் அறிவிப்பு | Kalvimalar - News

எஸ்.ஆர்.எம்., தமிழ் பேராயம் விருதுகள் அறிவிப்புசெப்டம்பர் 22,2021,10:55 IST

எழுத்தின் அளவு :

சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பல்துறை தமிழ் படைப்பாளர்களுக்கு வழங்கப்படும், &'தமிழ்ப் பேராயம்&' விருதுக்கு தேர்வான 11 பேர் பட்டியலை, தமிழ்ப் பேராயப் புரவலர் பாரிவேந்தர் வெளியிட்டார்.


எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தரும், தமிழ்ப் பேராயம் அமைப்பின் புரவலருமான பாரிவேந்தர், அளித்த பேட்டி:


எஸ்.ஆர்.எம்., மருத்துவ, பொறியியல் பல்கலை சார்பில், தமிழ் எழுத்தாளர்களை கவுரவிக்க 11 ஆண்டுகளுக்கு முன், தமிழ்ப் பேராயம் உருவாக்கப்பட்டது. இது ஆண்டுதோறும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கத்துடன், தகுதியான 11 பேருக்கு விருதுகளை வழங்குகிறது.


இந்தாண்டு விருதுக்கு தேர்வானோர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விருதுகள் மட்டுமின்றி, தமிழில் அர்ச்சனை, வெளிநாட்டில் தமிழாசிரியர் ஆவதற்கான படிப்புகளையும் வழங்குகிறது. வெளிநாட்டு தமிழ் அமைப்புகளையும், அறிஞர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து தலைமையில், &'உலகத் தமிழர் உறவு மையம்&' ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


பேட்டியின் போது, தமிழ்ப் பேராய தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். &'தமிழ்ப் பேராயம் - 2021&'க்கான விருது பட்டியலை, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தேர்ந்தெடுத்தது.


யார், யாருக்கு விருது?


விருது/நுால்/விருதாளர்

புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது/ கங்காபுரம் மற்றும் சுளுந்தீ/ அ.வெண்ணிலா மற்றும் முத்துநாகு ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.


பாரதியார் கவிதை விருது/ குறிஞ்சிப் பூக்கள்/கடவூர் மணிமாறன்அழ வள்ளியப்பா


குழந்தை இலக்கிய விருது/மழலையர் மணிப்பாடல்கள்/வெற்றிச் செல்வன்


ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது/நாலடியார்/டாக்டர் பழநி அரங்கசாமி பெ.நா.அப்புசாமி


அறிவியல் தமிழ் மற்றும் அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது/எந்திரத் தும்பிகள்/வி.டில்லிபாபு


முத்துத்தாண்டவர் தமிழிசை விருது/நாடகமும் தமிழிசையும்/ .கே.எஸ்.கலைவாணன்


பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது/அறிவு பற்றிய தமிழரின் அறிவு/சி.மகேந்திரன்


முத்தமிழறிஞர் கலைஞர் சமூகநீதி விருது/இனக்குழு வரைவியல்/சி.மகேசுவரன்


சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது/தென்மொழி/முனைவர் மா.பூங்குன்றன்


தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது/ -- / மணிமேகலை மன்றம், ராஜபாளையம்


அருணாசல கவிராயர் விருது/ -- / திருபுவனம் ஜி.ஆத்மாநாதன்


பாரிவேந்தர் பைந்தமிழ் விருது/ -- /முனைவர் பா.வளன் அரசு


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us