சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டணம் பாதிக்கப்பட்டோருக்கு விலக்கு | Kalvimalar - News

சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டணம் பாதிக்கப்பட்டோருக்கு விலக்குசெப்டம்பர் 22,2021,10:52 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும், கொரோனாவால் பெற்றோர், பாதுகாவலரை இழந்த மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.


மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகள், அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன.


இந்த பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் கொரோனா காரணமாக பெற்றோரை இழந்தோருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.


தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை இடைநிலை கல்வி வாரியத்திடம் பள்ளிகள் வழங்கும்போது, இந்த விபரங்களையும் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us