குரூப் - 4 பணிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங் நடத்த வேண்டும்: ராமதாஸ் | Kalvimalar - News

குரூப் - 4 பணிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங் நடத்த வேண்டும்: ராமதாஸ்செப்டம்பர் 20,2021,13:03 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 பணிகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்&' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


அவரது அறிக்கை:


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, மூன்று வகையான அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள், ஒரு மாதத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. நீண்ட இடைவெளிக்கு பின், அரசு பணிக்கு ஆள்தேர்வு துவங்கப்பட்டுஇருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம், சில பணிகளுக்கு நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வு, ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்படாதது வருத்தம் அளிக்கிறது.


தமிழக அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட ஏழு வகையான பணிகளுக்கு, ௬,௪௧௭ பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை, கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.


அந்தப் பணிகளுக்கு, அதே ஆண்டு செப்., 1ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, நவ., ௧௨ல் முடிவுகள் வெளியிடப்பட்டன. பின், இந்த பணியிடங்களின் எண்ணிக்கை ௯,௮௮௨ ஆக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, கடந்த ஆண்டு பிப்., ௧௯ முதல் மார்ச் 1௭ வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது.


அதில், மொத்தமுள்ள ௬,00௭ பணியிடங்களில், ௫,௭௯௮ இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், ௨௦௯ இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வில், ௨௨௧ இடங்கள் நிரப்பப்படவில்லை. 


எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 தேர்வுகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை, தேர்வாணையம் உடனே நடத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us