காலாண்டு தேர்வு துவக்கம் | Kalvimalar - News

காலாண்டு தேர்வு துவக்கம்செப்டம்பர் 20,2021,12:56 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் காலாண்டு தேர்வுகள் &'ஆன்லைன்&' வழியில் துவங்கின. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.


தமிழக அரசின் குறைக்கப்பட்ட பாடத் திட்டப்படி இந்த பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், காலாண்டு தேர்வு என்ற முதல் பருவ தேர்வுகள் இன்று பல பள்ளிகளில் துவங்கின. ஆன்லைன் வழியில் இந்த தேர்வுகள் நடத்தப்படும் என, மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதற்கிடையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத் திட்டத்தைப் பின்பற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு இந்த ஆண்டு முதல், இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதில், முதல் பருவத் தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பருக்கு இடையிலும்; இரண்டாம் பருவத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் இடையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us