அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகம் | Kalvimalar - News

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகம்செப்டம்பர் 20,2021,12:51 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக பாட புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.


உப்பளம் தொகுதி தி.மு.க., எம்.எல்.எல்., அனிபால் கென்னடி விடுத்துள்ள அறிக்கை:


நடந்தது முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்க வேண்டும் என்று தி.மு.க., சார்பில் கோரிக்கை வைத்தோம். 


கல்வி அமைச்சர், உடனடியாக புத்தகம் வாங்குவதற்கு நிதி ஒதுக்கி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். சட்டசபை கூட்ட தொடர் முடிந்து பல நாட்கள் ஆகியும் இதுவரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்காமல் இருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.ஏழை எளிய மக்கள்தான் அரசு பள்ளியில் படிக்கின்றனர்.


அந்த மாணவர்கள் புத்தகம் இல்லாமல் கல்வி பயின்றால் எப்படி தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட முடியும். ஆசிரியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும்.


கல்வித்துறையை மேம்படுத்த கல்வி அமைச்சர் பள்ளி கல்வித்துறைக்கு தனியாக இயக்குனர் நியமித்து கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us