அரசு பணிக்கு வயது அதிகரித்து அரசாணை வெளியீடு | Kalvimalar - News

அரசு பணிக்கு வயது அதிகரித்து அரசாணை வெளியீடுசெப்டம்பர் 17,2021,00:42 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அரசு பணிகளில், நேரடி நியமனம் வழியே பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, பணியாளர் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமாகின. எனவே, நேரடி நியமன வயது உச்சவரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என, நிதி அமைச்சர் தியாகராஜன், சட்டசபையில் மேலாண்மைத்துறை மானிய கோரிக்கையின்போது அறிவித்தார்.இது தொடர்பான அரசாணையை, தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.


அதில் கூறியிருப்பதாவது:


அரசு பணிகளில் நேரடி நியமனம் வழியே, பணி நியமனம் செய்வதற்கான வயது உச்சவரம்பு, 30 ஆண்டுகளில் இருந்து, 32 ஆண்டுகளாக உயர்த்தப் படுகிறது. தொடர்புடைய பணி விதிகளில், மேற்குறிப்பிட்ட அளவுக்கும் குறைவான வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள வயது உச்சவரம்பு பொருந்தும்.


பட்டியலினத்தவர் முதல், சீர்மரபினர் வரையிலான அனைத்து வகுப்பினர், அனைத்து வகுப்பினரிலும் உள்ள ஆதரவற்ற விதவையர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு, 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு நீட்டிப்பு அல்லது தளர்வுகள் தொடரும்.


கருணை அடிப்படையிலான நியமனங்களை பொறுத்தவரை, தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்சவரம்பு மாற்றமின்றி தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us