தனியார் மருத்துவ கல்லூரியில் அரசுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு.. | Kalvimalar - News

தனியார் மருத்துவ கல்லூரியில் அரசுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு..செப்டம்பர் 17,2021,00:25 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: தனியார் மருத்துவ கல்லுாரியில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற சட்டசபையில் கேள்வி எழுப்பியும், ஆளும் அரசு பதில் தரவில்லை என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:


சட்டசபையை எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவில்லை எனஆளும் அரசின் தோழமை கட்சி கூறியது வன்மையான கண்டனத்திற்கு உரியது.கடந்த 20 ஆண்டுகள் தனியார் மருத்துவ கல்லுாரிகள் அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்காதது குறித்து பல கேள்விகள் எழுப்பியும், அரசிடம் இருந்து பதில் வரவில்லை. 


மக்களுக்கு பயன்படாத நிறுவனங்கள் எதற்கு என கேட்டு, பிரதமர் கொண்டு வந்த என்.எம்.சி., சட்டத்தை அமல்படுத்தினால், நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 50 சதவீத இடம் கிடைக்கும் என கோரிக்கை வைத்தோம்.  அரசு பதில் தரவில்லை. 


மருத்துவ கல்லுாரி துவங்கும்போது அரசுக்கு 50 சதவீத இடங்கள் வழங்க வேண்டும் என போடப்பட்ட ஒப்பந்தம் எங்கேஎன கேள்வி எழுப்பினோம். 2006ம் ஆண்டு, தற்போதையமுதல்வர் பொறியியல் கல்லுாரிகளில் 50 சதவீத இடங்கள் அரசுக்குஒதுக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தபோது, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ஏன் ஆணை பிறப்பிக்கவில்லை. 


மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கை துவங்கும் முன்பு,மாணவர் கையேட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிட்டு வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us