நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் பேட்டி | Kalvimalar - News

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் பேட்டிசெப்டம்பர் 14,2021,10:55 IST

எழுத்தின் அளவு :

பல்லடம்: &'நீட்&' தேர்வு எழுதிய, திருப்பூர் மாவட்ட, மாணவ, மாணவியர் சிலர், &'நீட்&' தேர்வு குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.


முரளி கிருஷ்ணன், உடுமலை:


&'நீட்&'தேர்வால் மருத்துவரின் மதிப்பு புரியும். தமிழகத்தில் &'சீட்&'களை அதிகப்படுத்துவதுடன், அரசே &'நீட்&' பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதால் மாணவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.


பூமிகா, ஊத்துக்குளி:


அரசு ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ கனவு நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புடன் மட்டுமே எங்களை போன்ற அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுத வருகின்றனர். வசதி இல்லாததால், &'நீட்&' தேர்வுக்காக நான் எங்கும் பயிற்சி பெறவில்லை. தமிழக கல்லுாரிகளில் உள்ள மருத்துவ கல்வி இடத்தை இதர மாநிலத்தினர் பயன்படுத்தி கொள்கின்றனர். இது மாற வேண்டும்.


சுதிக் ஷா, திருப்பூர்:


&'நீட்&' கட்டாயம் நடத்தப்பட வேண்டும். &'நீட்&' தேர்வில் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில் இருந்தே பெரும்பாலும் கேட்கப்படுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமமாக இருக்கிறது.


ஜெயப்பிரசாத் ராமசாமி, நம்பியூர்:


&'நீட்&' நடத்துவதால், தகுதியானவர்கள் மட்டுமே மருத்துவராவர்; அரசு ஒதுக்கீடு மூலம் பயன்பெற பலர் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர். வரும் நாட்களில் &'சீட்&'களை அதிகப்படுத்துவதால் ஏழை மாணவர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறும்.


அபிநயா, அவிநாசி:


வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது. &'நீட்&' கஷ்டம் இல்லை. முடியும் என நினைத்தால் சாதிக்கலாம்; வெற்றி நம் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் நல்ல பயிற்சி கிடைத்தால் சாதிப்பது எளிதாகும். மருத்துவராக பலருக்கும் ஆசை உள்ளது. தமிழகத்தில் குறைவான மாணவர்களே வருகின்றனர். &'நீட்&' குறித்து பயம் தேவை


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us