மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவன் தற்கொலை | Kalvimalar - News

மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவன் தற்கொலைசெப்டம்பர் 12,2021,14:04 IST

எழுத்தின் அளவு :

மேட்டூர்: மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் பி.வி.சி. பைப் கம்பெனி ஊழியராக வேலை செய்கிறார். இவரது இளையமகன் தனுஷ்(20). இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதினார். இருமுறையும் தோல்வி அடைந்ததால் மூன்றாவது முறை படித்துக் கொண்டிருந்தார்.


இன்று மேட்டூர் அடுத்த மேச்சேரி காவிரி பாலிடெக்னிக் கல்லூரியில் நீட் தேர்வு நடக்க இருந்தது. இந்த தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தனுஷ் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்


சரியான முடிவு அல்ல


அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: 


எந்த பிரச்னைக்கும் உயிரை மாய்த்து கொள்வது சரியான முடிவாக இருக்காது. நீட்தேர்வில் விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழக அரசு நீட் தேர்வு தீர்மானத்தை நாளை நிறைவேற்ற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து

இது தற்கொலை அல்ல கொலை என்று யார் வாதாட போகிறார்கள் . பார்க்க வேண்டும்.
by Ambika. K,India    2021-09-13 05:15:48 05:15:48 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us