11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவரை சேர்க்க உத்தரவு! | Kalvimalar - News

11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவரை சேர்க்க உத்தரவு!ஜூலை 31,2021,17:17 IST

எழுத்தின் அளவு :

மதுரை: தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இந்தாண்டே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்; அதற்கேற்ப ஆய்வகம் போன்ற மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது, நாமக்கல், திண்டுக்கல், திருவள்ளூர், விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில், புதிதாக மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது. 


ஒவ்வொரு கல்லுாரிக்கும் 150 இடங்கள் என, 1,650 எம்.பி.பி.எஸ்., இடங்களில், மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மத்திய - மாநில அரசு களின் நிதி பங்களிப்புடன், மருத்துவக் கல்லுாரிக்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.


இந்நிலையில், புதிதாக அமையும் 11 மருத்துவக் கல்லுாரிகளில், இந்தாண்டே மாணவர்சேர்க்கையை நடத்திக்கொள்ள அனுமதி கோரி, தேசிய மருத்துவ ஆணையத்திடம், தமிழக மருத்துவ கல்வி இயக்ககம் விண்ணப்பித்துள்ளது. அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக, மாணவர் சேர்க்கைக்கு ஏற்ற வகையில் கட்டமைப்புகள் உள்ளதா என, தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள், சமீபத்தில் நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மருத்துவக் கல்லுாரிகளின் ஆய்வு செய்துள்ளனர். மற்ற மருத்துவக் கல்லுாரிகளிலும் அடுத்தடுத்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.


இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரை சக்தி நகரைச் சேர்ந்த வாசுவேதா என்பவர், 2020ல் தாக்கல் செய்த மனு:


&'நீட்&' தேர்வில், 720க்கு 521 மதிப்பெண் பெற்றேன். திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல் உட்பட 11 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகள், 2020 - 21ல் துவக்கப்படும்; மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், இந்த கல்லுாரிகள் இடம் பெறும் என, 2020 செப்., 7ல் தமிழக அரசு அறிவித்தது.


இக்கல்லுாரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 2020 - 21ம் ஆண்டு கவுன்சிலிங் பட்டியலில், புதிய கல்லுாரிகள் இடம் பெறவில்லை; அதற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்தவில்லை. மருத்துவப் படிப்பு கவுன்சிலிங் பட்டியலில், புதிய கல்லுாரிகள் இடம் பெற வேண்டும்; அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்புகள் துவக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


கடந்த 2020 நவம்பரில் நடந்த விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பு, &'11 மருத்துவக் கல்லுாரிகளில், 2021 - 22ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை துவங்கும்&' என, தெரிவித்தது. இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, &'புதிய மருத்துவக் கல்லுாரிகளில் ஆய்வகம் உட்பட அடிப்படை வசதிகளை செய்து, 2021 - 22ம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்&' என, உத்தரவிட்டது.


நீதிமன்ற உத்தரவு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆய்வு ஆகியவற்றின் காரணமாக, புதிய மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை இந்தாண்டே நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு, 26 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 3,550 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடந்தது. இந்தாண்டு, கூடுதலாக 11 மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தினால், 1,650 இடங்கள் கூடுதலாகி, 5,200 இடங்களில் மாணவர்கள் சேர வாய்ப்பு உருவாகும்.


&'எய்ம்ஸ்&' சேர்க்கை ஐகோர்ட் அவகாசம்


மதுரை, அதலையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், &'மதுரையில் கட்டுமானம் முடியும் வரை, தற்காலிக வளாகத்தில் எய்ம்சை துவக்க வேண்டும். வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவை துவக்கி, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்&' என கோரியிருந்தார். தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வு விசாரித்தது.


தமிழக அரசு தரப்பு, &'நடப்பு கல்வியாண்டில் 50 மாணவர்கள் சேர்க்கையுடன் எம்.பி.பி.எஸ்., வகுப்பை தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிகளில் துவங்க பரிசீலிக்கலாம். விடுதிகள் மற்றும் இதர வசதிகளை அடையாளம் காண, கூட்டு ஆய்விற்கு அனைத்து உதவிகளும் செய்யத் தயார்&' என, மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பிஉள்ளதாக கடிதம் தாக்கல் செய்தது. 


மத்திய அரசு தரப்பு, &'எந்த மருத்துவக் கல்லுாரியில் வகுப்புகள் துவங்கலாம் என, ஜூலை 7ல் தமிழக அரசிடம் விபரம் கோரினோம். ஆனால், ஜூலை 29 இரவு தான் பதில் வந்தது. பதிலளிக்க அவகாசம் தேவை&' என, தெரிவித்தது. அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கை ஆகஸ்டிற்கு ஒத்தி வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us