10, பிளஸ் 1 தேர்ச்சி சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு | Kalvimalar - News

10, பிளஸ் 1 தேர்ச்சி சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடுஜூலை 31,2021,17:15 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் தயாராகி உள்ளது. அதை மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பொது தேர்வுகள் ரத்து செய்யப் பட்டன. பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 செய்முறை மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, &'ஆல் பாஸ்&' வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக, ஆல் பாஸ் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.


இந்த சான்றிதழ் அச்சடிக்கப்பட்டு தயாராகி உள்ளது. இந்நிலையில், தேர்ச்சி சான்றிதழ் வழங்குவது குறித்து, பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார்.


அதில் கூறியிருப்பதாவது:


கடந்த 2020- - 21ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்த அனைத்து தேர்வர்களும் தேர்ச்சி என, தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக சான்றிதழ் வழங்கப்படும்.


அதில், &'குறிப்பிட்ட தேர்வர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்&' என, சான்றளிக்கப்படுகிறது என்ற வாசகம், சான்றிதழில் இடம் பெறும்.மதிப்பெண் குறிப்பிடும் பகுதியில், தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வகையில் சான்றிதழ்களை அச்சிட்டு, மாணவர்களுக்கு வழங்க, அரசு தேர்வுகள் இயக்குனருக்கு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us