இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க 4 நாளில் 80 ஆயிரம் பேர் பதிவு | Kalvimalar - News

இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க 4 நாளில் 80 ஆயிரம் பேர் பதிவுஜூலை 31,2021,17:13 IST

எழுத்தின் அளவு :

சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க நான்கு நாட்களில் 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 26ம் தேதி துவங்கியது. முதல் நாளிலேயே 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.


இதையடுத்து ஒவ்வொரு நாளும் விண்ணப்ப பதிவு செய்வோரின் எண்ணிக்கை உயர்ந்து வந்தது. நேற்று மாலை நிலவரப்படி நான்கு நாட்களில் 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 52 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்; 38 ஆயிரம் பேர் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.வரும் நாட்களில் விண்ணப்ப பதிவுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஆண்டு &'ஆல் பாஸ்&' வழங்கப்பட்டதால் முந்தைய ஆண்டுகளை விட இன்ஜினியரிங் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இன்ஜினியரிங் கல்லுாரி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us