பிளஸ் 2 ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம் | Kalvimalar - News

பிளஸ் 2 ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம்ஜூலை 31,2021,17:12 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, இன்று முதல் பதிவிறக்கலாம்.அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் திருப்தி இல்லாத மாணவர்களும், தனி தேர்வர்களும் எழுதும் வகையில், ஆக., 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள், இந்த தேர்வை எழுத விரும்பினால், அனைத்து பாடங்களுக்கும் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும். அதில் எடுக்கும் மதிப்பெண்களே, இறுதி மதிப்பெண்களாக கணக்கில் எடுக்கப்படும். 


தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்,www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us