சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 99.37 சதவீதம் தேர்ச்சி | Kalvimalar - News

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 99.37 சதவீதம் தேர்ச்சிஜூலை 31,2021,17:10 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியின. தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 99.37 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல, மாணவர்களை விட மாணவியரின் தேர்ச்சி விகிதம், 0.54 சதவீதம் அதிகமாக உள்ளது.

&'புதிதாக துவங்கப்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளைச் சேர்ந்த 65 ஆயிரம் மாணவ - மாணவியருக்கான தேர்வு முடிவுகள் ஆக., 5ல் வெளியிடப்படும்&' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று பரவல் காரணமாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. &'மாணவர்கள், 10வது மற்றும் பிளஸ் 1 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் தலா 30 சதவீதமும், பிளஸ் 2 பருவ தேர்வு. &'யூனிட் தேர்வு மற்றும் பயிற்சி பொது தேர்வு மதிப்பெண்களில், 40 சதவீதமும் கணக்கில் எடுத்து, உள்மதிப்பீட்டு அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும்&' என, சி.பி.எஸ்.இ., அறிவித்தது.


10 சதவீதம் அதிகம்


இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது.இது குறித்து, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் நேற்று கூறியதாவது:நடப்பு கல்வியாண்டில், 99.37 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம், 88.78 சதவீதமாக இருந்தது; இது, இந்த ஆண்டில், 10 சதவீதம் அதிகரித்துஉள்ளது. மாணவர்களை விட மாணவியரின் தேர்ச்சி விகிதம், 0.54 சதவீதம் அதிகமாக உள்ளது.


ஒரே சான்றிதழ்


கடந்த ஆண்டு, 38 ஆயிரத்து 686 மாணவர்கள், 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றனர். அது இந்த ஆண்டு, 70 ஆயிரமாக உயர்ந்துஉள்ளது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 934 பேர், 90 சதவீதத்திற்கும் மேல் பெற்றுஇருந்தனர். அது நடப்பாண்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 152 ஆக குறைந்து உள்ளது. சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களில் 129 பேர், 95 சதவீதத்திற்கு மேலும், 400 பேர் 90 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர். மத்திய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் முறையே, 4.48 மற்றும் 7.92 சதவீதம் உயர்ந்து உள்ளது. தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட 11 சதவீதம் உயர்ந்துள்ளன.


நடப்பாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாமல் போன 6,149 மாணவர்களுக்கு, ஆக., 16 - செப்., 15க்குள் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல், தேர்ச்சிக்கான சான்றிதழ் ஆகியவை தனித்தனியாக வழங்கப்பட்டு வந்தன. அது நடப்பாண்டில் ஒரே சான்றிதழாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மதிப்பெண்


இதற்கிடையே, 65 ஆயிரத்து, 184 பிளஸ் 2 மாணவர்களுக்கு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. &'புதிதாக துவங்கப்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளைச் சேர்ந்த இந்த மாணவர்களின், முந்தைய வகுப்புகளுக்கான மதிப்பெண்களை கணக்கிடும் பணி முடிவடையாததால், அவர்களுக்கு மட்டும் ஆக., 5ல், முடிவுகள் அறிவிக்கப்படும்&' என, சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் வாழ்த்து!


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:


கல்வி உலகில் இதுவரை பார்த்திராத மாற்றங்களை, மாணவர்கள் கடந்த ஆண்டு சந்தித்தனர். புதிய யதார்த்ததுக்கு பழகி, அதில் தங்களால் இயன்றவரை சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் என எண்ணும் மாணவர்கள், இந்த அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஏராளமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. நீங்கள் அனைவருமே திறமையின் அதிகார மையங்களாக உள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுளளது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us