சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு | Kalvimalar - News

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவுகள் வெளியீடுஜூலை 30,2021,17:32 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாத நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கோவிட் பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறையை சி.பி.எஸ்.இ., அறிவித்தது. 


அதன்படி, 10 மற்றும் 11-ம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் 30 சதவீதமும், 12-ம் வகுப்பு பருவத் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், 12 லட்சத்து 96 ஆயிரத்து 318 மாணவர்களது மதிப்பெண் முடிவுகளை இன்று www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளிடப்பட்டுள்ளன. மேலும், மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள் கோவிட் பெருந்தொற்று குறைந்த பிறகு தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us