பேராசிரியர் பதவி உயர்வு சர்ச்சை அரசு விசாரணைக் குழு ஆய்வு | Kalvimalar - News

பேராசிரியர் பதவி உயர்வு சர்ச்சை அரசு விசாரணைக் குழு ஆய்வுஜூலை 30,2021,17:26 IST

எழுத்தின் அளவு :

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பேராசிரியர்கள் பதவி உயர்வு சர்ச்சைகள் குறித்து தமிழக அரசின் விசாரணை குழு ஆய்வு துவங்கியுள்ளது.


சேலம் பெரியார், மதுரை காமராஜ் மற்றும் அண்ணாமலை பல்கலைகள் பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அரசு குழு அமைத்தது. இந்த குழு இணை செயலாளர் கார்த்திகா தலைமையில் காமராஜ் பல்கலையில் விசாரணையை துவக்கியுள்ளது. மாஜி துணைவேந்தர் செல்லத்துரை 40 பேராசிரியர்களுக்கு வழங்கிய பதவி உயர்வில் கடும் சர்ச்சை தொடர்கிறது.


இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதே பிரச்னை குறித்து ஓய்வு நீதிபதி அக்பர் அலி கமிட்டி விசாரணை நடந்தி அறிக்கை தாக்கல் செய்தது. அதில் பதவி உயர்வு முறைகேடுகளை உறுதி செய்து மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்தது. ஒன்றரை ஆண்டுகளாக குழு பரிந்துரைகள் கண்டுகொள்ளப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்ற பின் சிண்டிகேட் உறுப்பினர் தீனதயாளன், எம்.எஸ்., பல்கலை பேராசிரியர் பலவேசம் குழு மற்றும் பிற பல்கலைகளின் பேராசிரியர்கள் குழுக்களால் அடுத்தடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


40 பேரிடம் விசாரிக்கப்படுமா


இதுதொடர்பான வழக்கு ஆக.,12ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட குழுக்கள் அளித்த பரிந்துரைகள், ஆவணங்கள் அடிப்படையில் மட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்ட 40 பேராசிரியர்களிடமும் அரசு குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

புதிய அகராதி:கழகம்=ஊழல்
by venkatan,India    2021-07-31 08:16:51 08:16:51 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us