தினமலர் வழிகாட்டி 2.0 | Kalvimalar - News

தினமலர் வழிகாட்டி 2.0ஜூலை 30,2021,17:34 IST

எழுத்தின் அளவு :

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என, ஆர்வமுடன் உயர்கல்வியை எதிர்நோக்கும், பிளஸ் 2 வகுப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு, உயர்கல்வி குறித்த தகவல்களை அள்ளி வழங்கும், தினமலர் நாளிதழின் இரண்டாம் கட்ட, வழிகாட்டி நிகழ்ச்சி, ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதிகளில் நடக்கிறது.

முதற்கட்ட வழிகாட்டி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இரண்டாம் கட்ட வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி, &'தினமலர் மற்றும் கல்விமலர்&' இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பாகிறது.


&'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி&' உடன் இணைந்து வழங்கப்படும், இந்த &'ஆன்லைன்&' நிகழ்ச்சியில், ஏராளமான இளநிலை படிப்புகள், வேலை தரும் &'டாப்&' படிப்புகள், இந்த ஆண்டிற்கு உத்தேசமாக தேவைப்படும் &'கட்-ஆப்&' மற்றும் இன்ஜினியரிங் துறை வாய்ப்புகள், தொழில்முனைவோராக தேவையான திறன்கள் உட்பட பல்வேறு தகவல்களை நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மாணவர்களுக்கு வழங்க உள்ளனர்.


பங்கேற்கும் நிபுணர்கள்நிகழ்ச்சியில், கோர் இன்ஜினியரிங் படிப்புகள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் குறித்து நிபுணர் முகமது யூசுப், தொழில்முனைவோருக்கு தேவையான திறன்கள் குறித்து, &'கிஷ்புளோ&' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுரேஷ் சம்பந்தம். பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை &'கட்- ஆப்&' குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்லுாரியை தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவர் ஸ்ரீராம், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் வாய்ப்புகள் குறித்து, &'ஒர்க்போர்ஸ் மேனேஜ்மென்ட்&' இயக்குனர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.


பதிவு செய்யுங்கள்!


ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதிகளில் காலை 10:௦௦ முதல் 12:௦௦ மணி வரை, &'ஆன்லைன்&' வாயிலாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம். kalvimalar.com இணையதளத்தில் மாணவர்களின் பெயர், வகுப்பு மற்றும் மொபைல் எண் தகவல்களை அளித்து, பதிவு செய்து கொள்ளலாம்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us