தொழிற்கல்வி வகுப்பு மூடுவதை தடுக்க வேண்டும் | Kalvimalar - News

தொழிற்கல்வி வகுப்பு மூடுவதை தடுக்க வேண்டும்ஜூலை 29,2021,10:51 IST

எழுத்தின் அளவு :

வேலுார்: &'&'தொழிற் கல்வி வகுப்பு மூடுவதை தடுக்க வேண்டும்&'&' என வேலுாரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஜனார்த்தன் கூறினார்.


அவர் கூறியதாவது: 


சென்னை கோவை மதுரை மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருப்ப மாறுதல் வழங்க வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்ற வேண்டும்.


600 தொழிற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேல்நிலைப் பள்ளிகள் தொழிற் கல்வியை கட்டாய பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆகவே தொடர வேண்டும். 


தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றால் அந்த பள்ளியில் தொழிற் கல்வி வகுப்பு மூடப்படுவதை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் துறை ஆணையர் நந்தகுமாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us