வனவியலில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறதா? | Kalvimalar - News

வனவியலில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறதா?டிசம்பர் 16,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

வனவியல் எனப்படும் பாரஸ்டரி பிரிவில் பி.எஸ்சி., படிப்பு தரப்படுகிறது. காடுகளை பேணுதல், அழிவைத் தடுத்தல் போன்ற இன்றியமையாத செயல்களை அறிவியல் பூர்வமாகப் படிப்பது இந்தப்படிப்பாகும். 4 ஆண்டு படிப்பான பி.எஸ்சி., பாரஸ்ட்ரி படிப்பை நாட்டிலுள்ள பல வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் தருகின்றன.

 

21 வயதுக்குள் உள்ள பிளஸ் 2 படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குறைந்தது 163 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையத்தில் இதைப்படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us