தொழில்கல்வி மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

தொழில்கல்வி மாணவர் சேர்க்கைஜூலை 21,2021,20:23 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆய்ந்து பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட ஆணையம் சார்பில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.

கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோல பொறியியல் வேளாண்மை கால்நடை மீன்வளம் சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விபரங்களின்படி அரசுக் கல்லுாரிகள் பல்கலைகள் மற்றும் சுயநிதிக் கல்லுாரிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


இந்நிலை மாற்றப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் அளிக்க டில்லி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் கடந்த மாதம் 15ம் தேதி ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.ஆணையம் ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.


ஆணைய தலைவர் முருகேசன் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஆணையத்தின் அறிக்கையை சமர்பித்தார். அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் பல்வேறு துறை செயலர்கள் உடனிருந்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us