பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி?; சி.பி.எஸ்.இ., விளக்கம் | Kalvimalar - News

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி?; சி.பி.எஸ்.இ., விளக்கம்ஜூன் 17,2021,13:02 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ரிசல்ட் வரும் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. மேலும், பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ., விளக்கமளித்துள்ளது.

கோவிட் 2வது அலை பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து பல மாநிலங்களில் நடைபெறும் பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 


இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்காததால் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ.,  விளக்கமளித்துள்ளது. 


தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் விளக்கம்:


* 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 பாடங்களில் பெற்ற மதிப்பெண்களில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.

* பிளஸ் 1 வகுப்பு பாடங்களில் 30 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.

* பிளஸ் 2 வகுப்பு பாடங்களில் 40 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.

* பிளஸ் 2-வில் யூனிட் தேர்வுகள், பருவத் தேர்வுகள், செய்முறை தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

* செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.


ஜூலை 31-ம் தேதி ரிசல்ட்


இவ்வாறு விளக்கமளித்துள்ள சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ரிசல்ட் வரும் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us