தலைமையாசிரியர், பணியாளர்கள் 14 முதல் பள்ளிக்கு வர உத்தரவு | Kalvimalar - News

தலைமையாசிரியர், பணியாளர்கள் 14 முதல் பள்ளிக்கு வர உத்தரவுஜூன் 10,2021,16:04 IST

எழுத்தின் அளவு :

உடுமலை: அரசு தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், வரும், 14ம் தேதி முதல் பணிக்கு வருகை புரிய உத்தரவிடப்பட்டு உள்ளது.


கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், 2020-21ம் கல்வியாண்டின், ஆண்டுத்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு, ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதனால், பிளஸ் 2, மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் வழங்கி, உயர்கல்வி பயில்வதற்கான சான்றிதழ் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வரும், 14ம் தேதி முதல் பள்ளிக்கு வருகை புரிய உத்தரவிடப்பட்டுள்ளது.


கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


மாணவர்களுக்கு மதிப்பெண் மற்றும் உயர்கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தவிர, மாணவர்கள் சேர்க்கை துவக்கப்பட்டு, பாட புத்தகங்கள், கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. தவிர, பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தப்படுத்துதல், கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், வரும், 14ம் தேதி முதல் பணிக்கு வருகை புரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us