பிளஸ் 1 நுழைவுத் தேர்வு: நேற்று அறிவிப்பு இன்று வாபஸ் | Kalvimalar - News

பிளஸ் 1 நுழைவுத் தேர்வு: நேற்று அறிவிப்பு இன்று வாபஸ்ஜூன் 10,2021,16:00 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில், பிளஸ் ௧ மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. நேற்று அறிவிப்பு; இன்று வாபஸ் என்ற கதையாக, இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக, 24 மணி நேரத்தில் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., அரசு அமைந்த பின், பள்ளிக் கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் சர்ச்சைகளும் ஏற்படுகின்றன. பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியில், முதன்முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.


கோரிக்கை


அதற்கு முன், பள்ளிக் கல்வி இயக்குனர் பொறுப்பு வகித்தவருக்கு, எந்த பொறுப்பும் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அழுத்தங்களுக்கு பின், பள்ளிக் கல்வி இயக்குனருக்கு, மாற்று பணி வழங்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வை, மத்திய அரசு ரத்து செய்தது. 


தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், &'பிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடத்தப்படும்&' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறி வந்தார். &'மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தேர்வை ரத்து செய்ய வேண்டும்&' என, கல்வியாளர்களும், மருத்துவ வல்லுனர்களும் அரசை வலியுறுத்தினர்


அதன் பின், பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், பள்ளிகளில் பிளஸ் ௧ மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பை, நேற்று முன்தினம் அரசு வெளியிட்டது. அதாவது, &'10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தி, பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும்&' என, பள்ளிக் கல்வி துறை திடீர் உத்தரவு பிறப்பித்தது.


அவசர ஆலோசனை


இதையடுத்து, &'நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு, பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை நடத்துவதா&' என, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பிளஸ் 1 நுழைவுத் தேர்வை ரத்து செய்யும்படி, அரசை வலியுறுத்தினர்.


இதையடுத்து, முதல்வர் உத்தரவின்படி, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் உஷா தலைமையில், நேற்று சென்னை தலைமை செயலகத்தில், அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. எந்த ஒரு படிப்பின் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கூடாது என்பதே, தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளதால், பிளஸ் 1 சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை, திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை கமிஷனர் நந்தகுமார், புதிய சுற்றறிக்கை அனுப்பினார். 


அதில் கூறியிருப்பதாவது:


சுற்றறிக்கை


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி, பாடப்பிரிவுகளை ஒதுக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில், 15 சதவீதம் வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம்.அனுமதிக்கப்பட்டதை விட, அதிக இடங்களுக்கு விண்ணப்பங்கள் வந்தால், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், பாடப் பிரிவுகளை ஒதுக்கலாம்.


ஏற்கனவே அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியவாறு, 10ம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு எதுவும் நடத்த தேவையில்லை. பிளஸ் 1ல் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, இந்த மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து, அரசின் வழிகாட்டுதல்படி, வகுப்புகளை துவங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு, கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, ஒரே நாளில் அந்த உத்தரவை, தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us