வகுப்பு அட்டவணை தனியார் பள்ளிகள் புதிய திட்டம் | Kalvimalar - News

வகுப்பு அட்டவணை தனியார் பள்ளிகள் புதிய திட்டம்மே 17,2021,21:21 IST

எழுத்தின் அளவு :

பெங்களூரு: புதிய கல்வியாண்டிற்கான வகுப்புகளை, ஜூன் முதல் வாரம் துவங்குவதற்கான அட்டவணையை, தனியார் பள்ளி நிர்வாகங்கள், பெற்றோருக்கு அனுப்பி வருகின்றன.

நடப்பு கல்வியாண்டில், வகுப்பறை கற்றல் பாதியாகவும்; ஆன்லைன் முறை மீதியாகவும்; துவக்க நிலை வகுப்புகளுக்கு முழுவதுமே ஆன்லைன் முறையிலும் கடந்து விட்டது. 


புதிய கல்வியாண்டில், பாதுகாப்பான முறையில், மாணவர்கள் வகுப்பறை கல்வியை கற்க வேண்டுமென்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள, சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், புதிய கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் துவங்குவதற்கு பெற்றோருக்கு அட்டவணை அனுப்பியுள்ளனர்.


பெற்றோர் சிலர் கூறுகையில், &'&'ஆன்லைன் வகுப்புகள், ஜூன் முதல் வாரம் துவங்குவதாகவும், அதற்கு முன்னர், பெற்றோருக்காக, தனி கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் பள்ளியிலிருந்து தகவல் வந்துள்ளது. அடுத்த கல்வியாண்டுக்கான அட்டவணையும் தயார் செய்து அனுப்பியுள்ளனர்,&'&' என்றார். 


மாநில அரசின் கீழ், செயல்படும் பள்ளிகளில், ஜூலை முதலே, புதிய கல்வியாண்டு துவங்கும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், தனியார் பள்ளிகள் வகுப்புகளை முன்னதாக துவங்குவதால், பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.


துவக்க மற்றும் உயர்நிலை பள்ளி நிர்வாக சங்கத்தினர் கூறுகையில், &'&'மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதிய முறை, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. &'&'ஆன் லைனில் வகுப்புகள் நடத்தப் படுவதிலிருந்து, 48 மணி நேரம் வரை, அந்த பாடங்களை, ஆன்லைன் இணைப்பில் பார்த்துக் கொள்வதற்கான வசதி செய்யப்படும். சங்கத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த வசதி செய்து தரப்படும்,&'&' என்றனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us