பிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது? | Kalvimalar - News

பிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது? மே 13,2021,20:43 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கொரோனா தொற்று குறைந்ததும், பிளஸ் 2 தேர்வு நடத்தப்படும்; அதற்கான தேதி, 30 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும், என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்ற திட்டங்கள் குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், அதை நடத்துவதா அல்லது &'ஆல் பாஸ்&' வழங்கி தேர்வை ரத்து செய்வதா என, நேற்று மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் ஆலோசனைநடத்தினார்.


இதற்கு, &'பிளஸ் 2 மதிப்பெண் உயர் கல்விக்கு முக்கியம் என்பதால், தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும்; ரத்து செய்ய வேண்டாம்&' என, அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, பிளஸ் 2 பொதுத் தேர்வை கட்டாயம் நடத்துவது எனவும், சுகாதார துறை அனுமதி பெற்ற பின், முதல்வரிடம் கேட்டு, தேர்வு தேதியை நிர்ணயிக்கலாம் என முடிவானது. 


இது குறித்து அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:


பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்; கட்டாயம் நடத்த வேண்டும் என அதிகாரிகளும், பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஆனால், கொரோனா தொற்றின் தீவிரம், ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பிரச்னைகள் உள்ளதால், தற்போது தேர்வை நடத்த இயலாது. 


தொற்றின் தீவிரம் குறைந்து, சுகாதார துறை அனுமதித்தால் பொதுத் தேர்வு நடத்தப்படும்.தேர்வுக்கான தேதி, 15 அல்லது 30 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும். மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு போதுமான அவகாசம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us