சேதமடையும் பள்ளி கட்டடம்: நூலகம் அமைக்க கோரிக்கை | Kalvimalar - News

சேதமடையும் பள்ளி கட்டடம்: நூலகம் அமைக்க கோரிக்கைமே 10,2021,13:51 IST

எழுத்தின் அளவு :

கரூர்: கரூர் அருகே, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள பள்ளி கட்டடம் சேதமடையும் நிலையில் உள்ளது. இதனால், வேறு உபயோகத்துக்கு பள்ளி கட்டடத்தை பயன்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகம் பஞ்., அரங்கநாதன் பேட்டையில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அரங்கநாதன் பேட்டை மாரியம்மன் கோவில் அருகே கட்டப்பட்ட புதிய கட்டடத்துக்கு மேல்நிலைப்பள்ளி மாற்றப்பட்டது. ஆனால், பழைய பள்ளி கட்டடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. 


இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: 


அரங்கநாதன் பேட்டையில் பழைய மேல்நிலைப்பள்ளி கட்டடம் நல்ல நிலையில் உள்ளது. ஆனால், பள்ளி வளாகத்தில் முட்புதர் அதிகளவில் முளைத்துள்ளது. அதை அகற்றி விட்டு, துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் நூலகத்துக்கு பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் சேதமடையும் அபாயம் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us