பருவத்தேர்வுகள் ரத்து: பாரதியார் பல்கலை அறிவிப்பு | Kalvimalar - News

பருவத்தேர்வுகள் ரத்து: பாரதியார் பல்கலை அறிவிப்பு மே 10,2021,13:49 IST

எழுத்தின் அளவு :

கோவை: பாரதியார் பல்கலையின் கீழ், அனைத்து கல்லுாரிகளுக்கும் பருவத்தேர்வுகள் துவங்கவிருந்த நிலையில், தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கல்லுாரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, பாரதியார் பல்கலையின் கீழ் புதிய சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டு, மே 3ம் தேதி தேர்வுகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால், 10ம் தேதிக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. 


தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால், தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துவங்கவிருந்த பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேர்வு அட்டவணை பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் வெளியாகியுள்ளது. 


கல்லுாரி முதல்வர்களுக்கும், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பி, மாணவர்கள் அனைவருக்கும் தகவலை கொண்டு சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us