பிளஸ் 2 தேர்வு ஆலோசனை | Kalvimalar - News

பிளஸ் 2 தேர்வு ஆலோசனைமே 10,2021,13:48 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, ஆலோசனை நடத்துகிறார்.


தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல் பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கொரோனா பரவலால், அனைத்து மாணவர்களுக்கும், &'ஆல் பாஸ்&' வழங்கப்பட்டுள்ளது.


பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், செய்முறை தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த மாதம், 5ம் தேதி பொதுத் தேர்வு நடப்பதாக இருந்தது. ஆனால், தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மற்றும் கொரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.


இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வை நேரடியாக நடத்துவதா அல்லது ஆன்லைனில், &'மல்டிபிள் சாய்ஸ்&' வினா அடிப்படையில் நடத்தலாமா என்பது குறித்து, ஆலோசனை நடைபெற உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us