மாஜி துணைவேந்தர் சுரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் | Kalvimalar - News

மாஜி துணைவேந்தர் சுரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ்மே 08,2021,17:08 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணா பல்கலை ஊழல் விவகாரம் குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு முன்னாள் துணைவேந்தர் சுரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அண்ணா பல்கலை துணைவேந்தராக பணியாற்றியவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுரப்பா. கடந்த 2018 ஏப்ரல் முதல் இந்தாண்டு ஏப்ரல் 12 வரை பணியாற்றினார். புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் நடக்கின்றன. அண்ணா பல்கலைக்கு சொந்தமான பங்களாவில் சுரப்பா குடியிருந்து வருகிறார். விரைவில் அவர் வீட்டை காலி செய்து கர்நாடகாவுக்கு செல்ல உள்ளார்.


இந்நிலையில் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்குமாறு சுரப்பாவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுரப்பாவின் பதவிக் காலத்தில் 280 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரால் ஐந்து மாதங்களுக்கு முன் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது


இந்த ஆணையம் ஏற்கனவே அண்ணா பல்கலை பதிவாளர் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி மற்றும் பணியாளர்களை நேரில் ஆஜராக வைத்து விசாரணை நடத்தியுள்ளது. தற்போது முன்னாள் துணைவேந்தர் சுரப்பாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் சரியான விளக்கம் அளிக்காவிட்டால் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us