தமிழ் இருக்கைக்கு நிதி நடிகர் கமல் பெருமிதம் | Kalvimalar - News

தமிழ் இருக்கைக்கு நிதி நடிகர் கமல் பெருமிதம்மே 02,2021,21:39 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'டொரோன்டோ தமிழ் இருக்கைக்காக, உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் நிதி அளித்தது, தமிழ் எழுச்சியின் அடையாளம்&' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.


அவரது அறிக்கை: 


கனடாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஒன்று கூடி, டொரான்டோ பல்கலையில், தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அமைக்க வேண்டும் என, முடிவு செய்து நிதி திரட்ட ஆரம்பித்தனர்.தமிழ் இருக்கைக்காக, 30 லட்சம் டாலர்; இந்திய மதிப்பில், 22.22 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.


முழுக்க பரவி வாழும் தமிழர்கள் பலர், இந்த பல்கலைக்கு நிதி அளித்துள்ளது, ஓர் உணர்வுப் பூர்வமான தமிழ் எழுச்சியின் அடையாளம்.உலக நாடுகளில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கிருந்து எல்லாம் தமிழ் இருக்கைக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியையும், அதற்கு கிடைத்த வெற்றியையும், கனடா பார்லிமென்ட் வெகுவாக பாராட்டியுள்ளது.


டொரான்டோ பல்கலையில், தமிழ் மொழிக்கு இருக்கை அமைந்துள்ளது என்பது, ஒவ்வொரு தமிழரும், மகிழ்ச்சி கொள்ள வேண்டிய தருணம். இந்த அரும்பெரும் முயற்சியை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும், என் மனப்பூர்வமான வாழ்த்துகள், பாராட்டுக்கள். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us