இந்தியாவில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் எதிர்காலம் | Kalvimalar - News

இந்தியாவில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் எதிர்காலம்மே 02,2021,22:03 IST

எழுத்தின் அளவு :

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் கல்வியின் சவால்களை அடையாளம் கண்டு, முக்கியஸ்தர்களை ஒன்றிணைப்பதன் மூலம் நாட்டின் அக்கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், வெள்ளை ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

&'இந்தியாவில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் திட்டங்களின் எதிர்காலம்&' என்ற தலைப்பில் வெள்ளை ஆய்வறிக்கையை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை மற்றும் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ளனர். 


நாட்டில் உள்ள பயோமெடிக்கல் இன்ஜினியரிங் கல்வியின் பல்வேறு பங்குதாரர்கள், பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்களுக்கான பரிந்துரைகள் இந்த வெள்ளை அறிக்கையில் அடங்கி உள்ளன. 


&'‘சுகாதார தொழில்நுட்பங்களில் புதுமைகளை வழங்குவதில் உலகளாவிய தலைமையாக விளங்க அனைத்து ஆற்றலையும் இந்தியா தன்னகத்தே கொண்டுள்ள நிலையில், இந்த வெள்ளை அறிக்கை, பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் வாயிலாக சமூகத்திற்கு மேலும் சிறப்பாக சேவை செய்ய வழி வகுக்கும்’’ என்று சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.


 &'’நாட்டில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதே இந்த வெள்ளை அறிக்கையின் முக்கிய நோக்கம்’’ என்று அதன் ஆசிரியரும், பேராசிரியருமான மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us